ஆரோக்கியம்!!..

ஆரோக்கியம்-வித்யா தேவியின் கிறுக்கல்கள்

0
1370

ஆரோக்கியம்!!..

இன்டெர்மிட்டெண்ட் பாஸ்டிங் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா??..

புரியும்படி தமிழில் மொழிபெயர்த்தால் நாம் அவ்வபோது கடைபிடித்து வாழும் விரதமுறையை அல்லது நோன்புமுறையைதான் ஆங்கிலத்தில் அவ்வாறு குறிப்பிடுவார்கள்.

முப்பது வயதை கடந்தவர்கள் அவசியம் அனுசரிக்க வேண்டியமுறை இது!!..

அதாவது ஒரு பதினாறுமணி நேரமாவது ஒன்றும் உண்ணாமல் வயிற்றை கிடப்பில்போட வேண்டும் அதிகபட்சமாக உங்களால் ஒரு இருபத்துமூன்று மணிநேரம் வாயை கட்டுப்படுத்த முடிந்தால் எழுதிவைத்து கொள்ளுங்கள் மற்றவர்களது கண்முன்னே தெரியும் நீங்கள் சாதாரண ஆளில்லை மிகப்பெரிய ஆள்தான்.

புரியவில்லையா??.. ஒரு நாளைக்கு ஒருமுறை சாப்பிடுவதைதான் அப்படி சொல்கிறேன் இதைதான் நமது சித்தர்கள் அன்றே கடைப்பிடித்து வாழ்ந்தார்களே அவர்களை போலவே நாமும் ஒரு தியான முறையான அமைதியான வாழ்க்கையை கடைப்பிடித்து வாழ்ந்திருந்தால் அவ்வாறு உண்பதில் எந்தசிரமமும் இருக்காது.

ஆனால் என்னசெய்ய பிள்ளைகுட்டிகளை வைத்துக்கொண்டு சக்கரமாய் சுழலும்போது அதையெல்லாம் நினைத்துப்பார்க்க முடியுமா என்ன??..

ஆனாலும் அதிகபட்சமாக ஒரு பதினாறுமணி நேரமாவது உணவு உண்ணாமல் கட்டுப்பாடுடன் வாழ்வதே சாலச்சிறந்தது. ஏனெனில் இன்சுலின் என்னும் வில்லன் உடலில் சுரக்கப்படுவதை கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த முறை இதுவேயாகும்.

இன்சுலினிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா அதைப்பற்றி பிறகு சொல்கிறேன் முதலில் இதை கேளுங்கள்.

முப்பது வயதிற்குமேல் நமது உடலிலுள்ள குரோத் ஹார்மோன் தன்னுடைய சுறுசுறுப்பை கொஞ்சம்கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் அதனால் மெட்டபாலிசத்தின் வேகமும் குறைந்துவிடும் அதாவது உண்ணும் உணவுகளின்மூலம் பெறப்படும் குளுக்கோஸை கரைக்க தேவைப்படும் சக்தி வயது ஏறயேற குறைந்துகொண்டே வரும்.

அதன்காரணமாக குளுக்கோஸ் கலோரிகளாக கரைய வழியில்லாமல் உடலில் கொழுப்புகளாக தங்கிவிடும் அதன்விளைவு என்னவாக இருக்குமென்று சொல்லத்தான் வேண்டுமா??.. உடல்பருமன்தான் தொப்பைதான்.

உடல்பருமனுக்கான காரணம் என்னவென்று சரியாக புரிந்துகொண்டால் அதனை குறைப்பது மிகஎளிது அனைத்திற்கும் தேவை ஒருவரது ஆர்வம் கவனம் பொறுமை அவ்வளவுதான்.

உங்களுக்கு சலிப்பு தட்டாமலிருக்க ஒரு கதையோடு இதனை விளக்குகிறேன்.

எனது தோழி ஒருத்திக்கு அவளுடைய உடல்பருமன் குறித்த கவலை நிறையவேயுண்டு அதன்காரணமாக பிபி சுகர் கால்வலி உடல்சோர்வு தளர்வு  சுகமின்மையென அனைத்தையும் பெற்றிருக்கிறாள் ஒருமுறை அதுகுறித்து அவள் கவலைப்பட்டபோது  “நா குண்டா இருக்குறதுனால தான் என் வீட்டுக்காரருக்கு என்னை பிடிக்கமாட்டேங்குன்னு என்மககூட சொல்றா நா ஒல்லியாகணும் எனக்கு ஏதாது ஒருவழி சொல்லுடி” என்றாள்.

அதற்கு நான் “இப்படியெல்லாம் பேசி என்னை கோபப்படுத்துனா நா ஹெல்ப் பண்ணமாட்டேன் என்னை இம்ப்ரெஸ் பண்றமாதிரி வேறுஏதாது காரணம் சொல்லு ஹெல்ப்பண்றேன்” என்றேன்.

சிறிய மௌனத்திற்குபிறகு  “என்னைநம்பி மூணுபுள்ளைங்க இருக்காங்க என்னைவிட்டா அவங்களுக்கு யாரும் இல்ல அவங்களுக்காக நா நல்லா இருக்கணும் அதனால ஹெல்ப் பண்ணுன்னு சொல்லு அப்போ நா ஹெல்ப் பண்றேன்” என்றபோது அவள் “ஆமாண்டி அதுதான் உண்மை ஹெல்ப் பண்ணுடீ” என்று இறங்கிவந்தாள்.

தொடர்ந்து நான் “நா சொல்ற டயட்லாம் உன்னால பாலோ பண்ணமுடியாது ஆனா இதுக்கு சிம்பிள்ளான இன்னொரு வழியிருக்கு அதமட்டும் பாளோபண்ணு சீக்கிரம் ரிசல்ட் பாக்கலாம்” என்றேன் அதற்கு அவளும் சொல்லுசொல்லு என்று ஆர்வமானாள்.

“முதல்நாள் நயிட்டு எட்டுமணிக்குள்ள நைட்டு சாப்பாட சாப்ட்டு முடிச்சுடு அப்றம் அடுத்தநாளு மத்தியானம் பன்னெண்டு மணிக்குமேலதான் அடுத்த சாப்பாடு சாப்பிடணும் ஓகேவா??” என்றுவிட்டு “ஆனா இன் தி மீண்டைம் நிறைய எக்ஸ்சர்ஸைஸ் பண்ணனும் வாக்கிங் போகணும் உடம்ப ஆக்ட்டிவா வச்சியிருக்கணும் காபி ஜூஸ் எதுவுமே குடிக்கக்கூடாது அண்ட் ஸ்ட்ரிக்ட்ல்லி நோ ஸ்னாக்ஸ் நாட் ஈவென் ப்ரூட்ஸ் அவ்ளோதான் விஷயம்” என்னும்போது அவள் வாயில்கைவைத்து அவளது அதிர்ச்சியை வெளிக்காட்டினாள்.

பிறகு “என்னடிசொல்ற அவ்ளோநேரம் எப்டி சாப்பிடாம இருக்குறது?? டீ கூட குடிக்ககூடாதா என்னை என்ன சாகசொல்றீயா ” என்று ஆவேசப்படும்போது “நானென்ன செத்தா போயிட்டேன் நோன்பு’ன்னு நினைச்சிக்கோ அப்போல்லாம் ஒரு தடவதானே சாப்பிடுவ அதுமட்டும் எப்டிமுடியுது” என்னும்போது அவள் அதைப்பற்றி யோசிப்பாள்.

பிறகு ஒருவழியாய் அனைத்திற்கும் சரிசரியென்று தலையாட்டிவிட்டு உற்சாகமாய் செல்பவள் அலைபேசியில் அழைத்து “வாக்கிங் போனேண்டி ஒரு ஜூஸ் மட்டும் குடிச்சிக்கவா” என்பாள் நானோ அழுத்தமாக “நோ” என்றுவிட்டு “தண்ணிகுடி” என்பேன் அவ்வளவுதான் அதோடு ஒல்லியாகும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.

இளைக்கவேண்டுமென்கிற எண்ணம் உங்களது வார்த்தைகளில் அல்ல உங்களது மனதினில் இருக்கவேண்டும் அப்படி இருக்கும்பட்சத்தில் இளைப்பதென்பது எளிது.

குறிப்பாக காலை உணவு மிகவும் அவசியமானது அதனை முறையாக உண்ணாவிட்டால் அது இதுவாகும் இது அதுவாகுமென்று பலர் பலவாறு பயமுறுத்துவார்கள் அதெல்லாம் ஒருசிலருக்கு சரி ஆனால் அனைவருக்கும் பொருந்துமென்று தோன்றவில்லை.

பதினாறு மணிநேரத்தில் ஒரு ஜூஸ்கூட குடிக்கக்கூடாது என்று நான் சொன்னதற்கும் காரணம் இருக்கிறது ஏனெனில் ஒவ்வொருமுறையும் நாம் உணவருந்தும்போது நமது உடம்பில் எக்கச்சக்கமான இன்சுலின் சுரக்கப்படும் அதிகப்படியாக உணவருந்துவது மட்டுமல்ல அதிகப்படியாக இன்சுலின் சுரக்கப்படுவதும்கூட உடல்பருமனுக்கு காரணமாக அமைகிறதென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டைப் 2 டையாபடிஸ் மற்றும் ப்ரீடையாபடிஸ் போன்ற மாறுபாடுகளுக்கு இன்சுலின் மட்டுமே காரணமென்று அறிஞர்கள் தெளிவுப்படுத்துவார்கள் அப்படி இருக்கும்பட்சத்தில் இன்சுலினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டியது அத்தியாவசியம்.

அதற்கு பதினாறு மணிநேர உணவு இடைவெளியே சாலச்சிறந்தது.

எனக்கு இன்சுலின்பற்றி கவலையில்லை உடல்நலனில் அக்கறையில்லை உடல்பருமனால் என்னானாலும் பரவாயில்லை என்று நீங்கள் இதனின்று ஒதுங்கிவிட முடியாது காரணம் இப்போது நீங்கள்வாழும் வாழ்க்கை உங்களுக்கானது அல்ல உங்களது குழந்தைகளுக்கானது.

இருந்தாலும் உங்களது உடலை சரியாக புரிந்துகொண்டு முயற்சிகளை முன்னெடுப்பதே உகந்தது.

முக்கியமாக கடவுள் மார்க்கங்களான விரதங்களும் நோன்புகளும் இதுபோன்ற ஆரோக்கிய வாழ்வினை உத்வேகப்படுத்துமென்றால் ஒன்றும் தப்பில்லை கடவுளையும் நம்பலாம்.

நன்றி

வித்யா

 

Leave a Reply