Consciousness Creates Reality

Consciousness Creates Reality

0
599

கற்பனைக்கு எட்டாத அத்தனை புதிர்களும் இந்த ஒரு வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது.

புரியவில்லையா??… முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாத வாக்கியம் இது இருந்தாலும் புரிந்தவற்றை புரிந்ததுவரை விளக்குகிறேன். உங்களுக்கு ஏதாவது புரிகிறதா என்று பாருங்கள் மற்றவை உங்களது கற்பனைக்கே.

ஆழ்ந்து கவனித்தால் இது அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைக்கும் வாக்கியமாக தோன்றும். அதாவது ஒன்றிணையவே முடியாத இரண்டு எதிர்துருவங்களும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒன்றிணைந்து விலகிச்செல்லும்.

முரண்பட்ட எதிர்துருவங்களை ஒன்றிணைத்த புள்ளி எதுதெரியுமா??… கடவுள்!!..

என்னது கடவுளா??.. அதெப்படி கடவுள் கோட்பாடு அறிவியலுக்குள் சாத்தியப்படுமென்று குழம்பவேண்டாம். குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற அணுஉலக கோட்பாடு அகண்ட பிரபஞ்சத்தின் உணர்வுநிலையை ஒரு மேம்பட்ட அம்சமாக அடையாளப்படுத்திவிட்டு நகர்ந்துசெல்லும்.

புரியும்படி சொல்லுவதென்றால் கான்ஸ்ஷியஸ்னஸ் அதாவது உணர்வுநிலை என்கிற அலைவரிசை அலையலையாக குவிந்து சங்கமிக்கும் இடம் கடவுளாககூட இருக்ககூடுமென்று ஊக்குவிக்கும்.

வியப்பாக இருக்கிறதா முழுவதும் கேளுங்கள் சொல்கிறேன். ஐன்ஸ்டின் காலத்தில் ஸ்க்ராடிஞ்சர் என்றொரு குவாண்டம் உலக விஞ்ஞானி தன்னுடைய கோட்பாட்டின் மூலமாக புதிர்நிறைந்த பூனைக்கதை ஒன்றை விளக்கினார். அதைக்கேட்டு ஐன்ஸ்டின் உட்பட உலக விஞ்ஞானிகள் யாவரும்  தலையில் கைவைத்து அமர்ந்தனர்.

வித்தியாசமான சிந்தனையை எதிர்த்துவந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ஸ்க்ராடிஞ்சர் அதைப்பற்றி யோசித்துயோசித்து தன்னிலைமறந்து அவரும் குழம்பி நம்மையும் குழப்பி கடைசியில் தனக்கு குவாண்டம் உலகமே வேண்டாமென்று உயிரியல் பக்கமாய் சென்றுவிட்டாராம். ஆனால் இன்றுவரை அந்த பூனைக்கதை அறிவியல் உலகில் குறிப்பாக குவாண்டம் உலகில் மிகப்பெரிதாக பேசப்படுகிறது.

அந்த கதை என்னதெரியுமா??

சொல்கிறேன் கேளுங்கள்!! ஆனால் சற்றுநேரம் லாஜிக்கை எல்லாம் மறந்துவிட்டு கேளுங்கள்!! தற்போது பூமியில் அல்ல நீங்கள் அண்டத்தில் உள்ளீர்களென்று வைத்துக்கொள்வோம். உங்களது கையில் விஷவாயு அடங்கிய ஒரு குவளை இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அந்த குவளையை ஒரு கார்டுபோர்ட் பெட்டியினுள்வைத்து அடையுங்கள். அடைத்துவிட்டீர்களா??..

இப்போது நீங்கள் அதிகமாக வெறுக்கும் ஒரு பூனையை அதே பெட்டியினுள் வைத்துமூடுங்கள். மூடிவிட்டீர்களா??.. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த பெட்டியிலிருக்கும் குவளையில் உள்ள விஷவாயு ஒருவேளை வெளியேறலாம் அல்லது வெளியேறாமலும் போகலாம் என்று வைத்துக்கொள்வோம் சரியா

இப்போது கேள்விக்கு வருகிறேன் பெட்டியை திறக்கவேண்டாம் குறிப்பிட்ட நேரத்திற்குபிறகு அதிலுள்ள பூனையின் கதி என்னவாகியிருக்கும்??.. யோசித்து சொல்லுங்கள் பார்ப்போம்.

ஒன்று அது இறந்திருக்க வேண்டும் அல்லது உயிர்த்திருக்க வேண்டும் விடை இவற்றில் ஏதேனும் ஒன்றாகதான் இருக்கமுடியும் அல்லவா?? ஆனால் குவாண்டம் கோட்பாடு இதற்கான விடையை எப்படிசொல்லும் தெரியுமா அது உயிருடனும் இருக்கும் இறந்துமிருக்கும் என்று பதிலளிக்கும்.

என்னது?? இதுவா பதிலென்று வியந்துபோன ஐன்ஸ்டீன் ஒன்று அது உயிருடன் இருக்கவேண்டும் அல்லது இறந்திருக்கவேண்டும் அதெப்படி இரண்டுமாக இருக்கமுடியுமென்று தலையில் கைவைத்தாராம்.

ஆனால் ஸ்க்ராடிஞ்சர் அவருடைய வாதத்தை அங்கிருந்துதான் ஆரம்பிப்பார்   அதாவது அந்தபெட்டி மூடியிருக்கும்வரை அதற்கான விடையை உங்களால் அறிந்துகொள்ள முடியாது. ஆனால் ஒருவேளை நீங்கள் அந்தபெட்டியை திறந்துபார்த்தால் அதன் உண்மைநிலையை முழுவதுமாக கண்டறியலாம் என்றுவிட்டு மேலும் தொடர்வார்.

ஒருவேளை அப்பூனை அதனுள் உயிருடன் இருக்கலாம் ஆனால் அது உயிருடன் இருப்பதை நீங்கள் மட்டும் உணர்ந்தால் போதாது நீங்கள் உயிருடன் இருப்பதை நான் உணரவேண்டும் நான் உயிருடன் இருப்பதை இந்த சமூகம் உணரவேண்டும் இந்த சமூகம் உணர்ந்ததை இந்த உலகம் உணரவேண்டும் இந்த உலகம் உணர்ந்ததை எங்கோயிருக்கும் யாரோ ஒருவர் உணரவேண்டும் அப்போதுதான் அது உண்மையாகும் இல்லையென்றால் இன்றுவரை நாம் வகுத்திருக்கும் பிரபஞ்சம் சூரியன் சந்திரன் பூமி நேரம் காலம் தூரம் நீங்கள் நானென அனைத்துமே நிஜமில்லாமல் போகும் என்று யோசிக்கவைத்து நிறையவே குழப்புவார்.

அதாவது உணர்வதற்கும் கவனிப்பதற்கும் யாரோஒருவர் இருக்கும்வரைதான் அனைத்திற்குமே பொருள் இருக்கிறது. உணர்வுநிலை என்கிற அலைவரிசை பிரபஞ்சத்தை வியாபித்திருக்கும்வரைதான் அனைத்துமே உண்மைக்கு உட்படும் அப்படியொன்று இல்லையென்றால் எதற்குமே பொருளில்லை என்பார்.

அவர் சொல்வதும் சரிதானே!! பூமியில் ஒருவேளை மனிதர்கள் இல்லையென்றால் பிக்பாங் முதற்கொண்டு சூரியன் பூமிபோன்ற எதற்காவது பொருள் இருக்கிறதா அதிலும் குறிப்பாக பிக்பாங் என்கிற நிகழ்வு கடந்த 13.7 பில்லியன் ஆண்டுகளாய் கடந்துவந்த தூரம் காலம் போன்றவற்றிற்கெல்லாம் ஏதாவது பொருள் இருக்கிறதா??

ஆனாலும் ஐன்ஸ்டின் உட்பட யாருமே இதனை ஏற்றுக்கொள்ளவில்லை இருந்தாலும் இந்த தலைசுற்றல் வாதத்திற்காக தன்னுடைய வாழ்நாளை வீணடிக்காமல் ஸ்க்ராடிஞ்சர் தனது கவனத்தை வேறுதுறைக்கு திசைதிருப்பி நகர்ந்துவிட்டார். ஆனாலும் இன்றுவரை ஸ்க்ராடிஞ்சர் பூனை அறிவியல் உலகத்தின் மத்தியில் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் அணுஉலக கோட்பாட்டினை நியாயப்படுத்தும் ஸ்டிரிங் தியரியின் ஆய்வாளர் மிசியோ காக்கு திறக்கப்படாத பெட்டியினுள் அடங்கியிருக்கும் பூனையின் நிலையை ஐம்பதுஐம்பது சதவீதமாக பிரித்தெடுத்து ஒன்றை நம்முடைய பிரபஞ்சத்திற்கும் இன்னொன்றை இணை பிரபஞ்சத்திற்கும்(parallel universe) பிரித்துக்கொடுப்பார். அதாவது ஒரு பிரபஞ்சத்தில் அது உயிருடன் இருக்கும் இன்னொன்றில் அது மரணித்திருக்கும் என்பார்.

தெரியும்தானே ஸ்டிரிங் கோட்பாட்டின்படி ஒரு பிரபஞ்சத்தின் பிரதி(copy) அண்டத்தில் பற்பல பிரபஞ்சங்களாக அகண்டு விரிந்திருக்கும்.

ஆனால் ஸ்க்ராடிஞ்சர் அவருடைய வாதத்தை அங்கிருந்துதான் ஆரம்பிப்பார்   அதாவது அந்தபெட்டி மூடியிருக்கும்வரை அதற்கான விடையை உங்களால் அறிந்துகொள்ள முடியாது. ஆனால் ஒருவேளை நீங்கள் அந்தபெட்டியை திறந்துபார்த்தால் அதன் உண்மைநிலையை முழுவதுமாக கண்டறியலாம் என்றுவிட்டு மேலும் தொடர்வார்.

ஒருவேளை அப்பூனை அதனுள் உயிருடன் இருக்கலாம் ஆனால் அது உயிருடன் இருப்பதை நீங்கள் மட்டும் உணர்ந்தால் போதாது நீங்கள் உயிருடன் இருப்பதை நான் உணரவேண்டும் நான் உயிருடன் இருப்பதை இந்த சமூகம் உணரவேண்டும் இந்த சமூகம் உணர்ந்ததை இந்த உலகம் உணரவேண்டும் இந்த உலகம் உணர்ந்ததை எங்கோயிருக்கும் யாரோ ஒருவர் உணரவேண்டும் அப்போதுதான் அது உண்மையாகும் இல்லையென்றால் இன்றுவரை நாம் வகுத்திருக்கும் பிரபஞ்சம் சூரியன் சந்திரன் பூமி நேரம் காலம் தூரம் நீங்கள் நானென அனைத்துமே நிஜமில்லாமல் போகும் என்று யோசிக்கவைத்து நிறையவே குழப்புவார்.

அதாவது உணர்வதற்கும் கவனிப்பதற்கும் யாரோஒருவர் இருக்கும்வரைதான் அனைத்திற்குமே பொருள் இருக்கிறது. உணர்வுநிலை என்கிற அலைவரிசை பிரபஞ்சத்தை வியாபித்திருக்கும்வரைதான் அனைத்துமே உண்மைக்கு உட்படும் அப்படியொன்று இல்லையென்றால் எதற்குமே பொருளில்லை என்பார்.

அவர் சொல்வதும் சரிதானே!! பூமியில் ஒருவேளை மனிதர்கள் இல்லையென்றால் பிக்பாங் முதற்கொண்டு சூரியன் பூமிபோன்ற எதற்காவது பொருள் இருக்கிறதா அதிலும் குறிப்பாக பிக்பாங் என்கிற நிகழ்வு கடந்த 13.7 பில்லியன் ஆண்டுகளாய் கடந்துவந்த தூரம் காலம் போன்றவற்றிற்கெல்லாம் ஏதாவது பொருள் இருக்கிறதா??

ஆனாலும் ஐன்ஸ்டின் உட்பட யாருமே இதனை ஏற்றுக்கொள்ளவில்லை இருந்தாலும் இந்த தலைசுற்றல் வாதத்திற்காக தன்னுடைய வாழ்நாளை வீணடிக்காமல் ஸ்க்ராடிஞ்சர் தனது கவனத்தை வேறுதுறைக்கு திசைதிருப்பி நகர்ந்துவிட்டார். ஆனாலும் இன்றுவரை ஸ்க்ராடிஞ்சர் பூனை அறிவியல் உலகத்தின் மத்தியில் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் அணுஉலக கோட்பாட்டினை நியாயப்படுத்தும் ஸ்டிரிங் தியரியின் ஆய்வாளர் மிசியோ காக்கு திறக்கப்படாத பெட்டியினுள் அடங்கியிருக்கும் பூனையின் நிலையை ஐம்பதுஐம்பது சதவீதமாக பிரித்தெடுத்து ஒன்றை நம்முடைய பிரபஞ்சத்திற்கும் இன்னொன்றை இணை பிரபஞ்சத்திற்கும்(parallel universe) பிரித்துக்கொடுப்பார். அதாவது ஒரு பிரபஞ்சத்தில் அது உயிருடன்இருக்கும் இன்னொன்றில் அது மரணித்திருக்கும் என்பார்.

தெரியும்தானே ஸ்டிரிங் கோட்பாட்டின்படி ஒரு பிரபஞ்சத்தின் பிரதி(copy) அண்டத்தில் பற்பல பிரபஞ்சங்களாக அகண்டு விரிந்திருக்கும்.

சரி அறிவியலை விடுவோம் ஆன்மீகத்திற்கு வருவோம்

“Consciousness creates reality” என்பதைப்பற்றி ஆன்மிகம் என்னசொல்கிறது தெரியுமா?? பொறுத்திருங்கள் இதைவிட பெரிய சமுத்திரம் அது அதைப்பற்றியும் நிறைய பேசலாம்……….

சற்று ஓய்வெடுங்கள்!! தொடரலாம்!!

நன்றி -வித்யா தேவி

Consciousness creates reality(in spiritual terms)

Leave a Reply